ஆண்ட்ராய்டு சாதனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்பு குழு (CERT-In) Android 12, 12L, 13, 14, மற்றும் 15 வெர்ஷன்களை பயன்படுத்தும் சாதனங்களுக்கான சைபர் பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த வெர்ஷன்களில் பல பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன, அவை தனிநபர் தகவல்களை திருட்டு செய்யும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.
இந்த குறைபாடுகள், arbitrary code செயல்படுத்துவதன் மூலம் denial of service (DoS) தாக்குதல்களுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, Android சிஸ்டம், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட்கள் மற்றும் சில முக்கிய கர்னல் அமைப்புகளில் உள்ள குறைபாடுகள் இதற்கு காரணமாக இருக்கின்றன. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தீவிர அச்சுறுத்தலை சமாளிக்க, பயனர்கள் தங்கள் சாதனங்களில் பொருத்தமான அப்டேட்களை ஏற்றுக்கொள்ளுமாறு CERT-In அறிவுறுத்தியுள்ளது.