"டானா" புயல் காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தில் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
வங்கக் கடலில் உருவாகிய "டானா" புயல் தீவிரமானதாக மாறியுள்ளது, இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய ஆரம்பமாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியபடி, கேரள மாநிலத்திலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் வருகிற 27-ந்தேதி வரை கனமழை பெய்யும் எனவும், கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.














