பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தமிடம் வழங்கினார்.
பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவிகள் உள்ளிட்ட நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. தொற்றுநோய் பரவாமல் தடுக்க மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.














