வங்கக்கடலில் வருகிற 25ஆம் தேதி ரீமால் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட தமிழக - தெற்கு கடலோர பகுதி தென்மேற்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு வடகிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது நாளை மத்திய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மே 25ஆம் தேதி புயலாக உருவெடுக்கும். இதேபோல தெற்கு கேரளா மற்றும் அதனையொட்டி உள்ள பகுதிகளின் மீது வளிமண்டல மேலடுக்க சுழற்சிகள் நிலவி வருகிறது. அதன் காரணமாக இன்று முதல் மே 28ஆம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் 25ஆம் தேதி வங்கக்கடலில் ரீ்மால் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இந்த புயல் வந்து 26 ஆம் தேதி மாலை தீவிரப் புயலாக கரையை கடக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது














