தமிழகத்தில் தெங்கடல் பகுதிகளில் நான்கு நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. இந்நிலையில் ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் அளவிற்கு கடல் உள்வாங்கியுள்ளது.
தமிழகத்தில் தென்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசி வருகிறது. இதில் குறிப்பாக ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை ஆகிய பகுதிகளில் கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் தங்களின் படகுகளை துறைமுகத்தில் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அங்கு மீன்பிடி துறைமுகத்தில் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த நாட்டுபடகுகள் மீட்க முடியாத நிலையில் சிக்கிக் கொண்டன. கடலில் நீர்மட்டம் உயர்ந்த பின் தான் படகை மீட்க முடியும் எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக தனுஷ்கோடியிலும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டு வருகிறது.