ஹெல்த் அண்ட் க்ளோ நிறுவனத்தை 750 கோடிக்கு வாங்கிய டி மார்ட் அதிபர் ராதாகிருஷ்ணன் தமானி

July 21, 2023

சில்லறை வர்த்தகத் துறையில், இந்தியாவின் பிரபல நிறுவனமான 'டி மார்ட்' நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தமானி. அவர், பெங்களூருவை சேர்ந்த அழகு மற்றும் உடல் பராமரிப்பு பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஹெல்த் அண்ட் க்ளோ நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளார். கிட்டத்தட்ட 750 கோடி ரூபாய்க்கு இந்த கையகப்படுத்தல் நடைபெற்றுள்ளது. ராதாகிருஷ்ணன் தமானியை பொறுத்தவரை, இது இரண்டாவது பெரிய கையகப்படுத்தல் நடவடிக்கை ஆகும். கடந்த 2015 ஆம் ஆண்டு, பாம்பே ஸ்வதேசி ஸ்டோர்ஸ் ஐ 42 கோடி ரூபாய்க்கு அவர் […]

சில்லறை வர்த்தகத் துறையில், இந்தியாவின் பிரபல நிறுவனமான 'டி மார்ட்' நிறுவனத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன் தமானி. அவர், பெங்களூருவை சேர்ந்த அழகு மற்றும் உடல் பராமரிப்பு பொருட்கள் வர்த்தகத்தில் ஈடுபடும் ஹெல்த் அண்ட் க்ளோ நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளார். கிட்டத்தட்ட 750 கோடி ரூபாய்க்கு இந்த கையகப்படுத்தல் நடைபெற்றுள்ளது.

ராதாகிருஷ்ணன் தமானியை பொறுத்தவரை, இது இரண்டாவது பெரிய கையகப்படுத்தல் நடவடிக்கை ஆகும். கடந்த 2015 ஆம் ஆண்டு, பாம்பே ஸ்வதேசி ஸ்டோர்ஸ் ஐ 42 கோடி ரூபாய்க்கு அவர் கையகப்படுத்தியது அவரது முதல் படியாகும். அடுத்த கட்டமாக, தற்போதைய ஹெல்த் அண்ட் க்ளோ கையகப்படுத்தல் நிகழ்ந்துள்ளது. இந்தியாவில், அழகு மற்றும் உடல் பராமரிப்பு சார்ந்த வர்த்தகம் பெருமளவு உயர்ந்து வரும் நிலையில், இந்தத் துறையில் ராதாகிருஷ்ணன் தமானியின் வருகை மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. மேலும், அவென்யூ சூப்பர்மார்ட் நிறுவனத்தின் வெற்றியைப் போல, புதிய துறை வர்த்தகத்திலும் ராதாகிருஷ்ணன் தமானி வெற்றி பெறுவார் என பேசப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu