சொந்த முயற்சியில் தொழில் முனைவோராக இருந்து சிறந்த தொழில் அதிபர்களாக பலர் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களுக்கான மதிப்பீட்டு பட்டியலை ஹுருன் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் டி மார்ட் நிறுவனத்தை உருவாக்கிய ராதாகிருஷ்ணன் தமானி முதலிடம் பிடித்துள்ளார். இவரது மொத்த சந்தை மதிப்பு 238188 கோடி ரூபாயாக சொல்லப்பட்டுள்ளது.
ராதாகிருஷ்ணன் தமானி உருவாக்கிய டி மார்ட் இந்திய சில்லறை வணிக சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஹுருன் தெரிவித்துள்ளது. அவரைத் தொடர்ந்து, பிளிப்கார்ட் நிறுவனத்தின் பின்னி பன்சால் மற்றும் சச்சின் பன்சால் ஆகியோர் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளனர். இவர்களின் சந்தை மதிப்பு 119472 கோடி ஆக உள்ளது. ஜொமாட்டோ நிறுவனத்தை உருவாக்கிய தீபேந்தர் கோயல் 86835 கோடி சந்தை மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். நான்காம் இடத்தில், ஸ்விக்கி நிறுவனர் ஸ்ரீஹர்ஷா மஜெட்டி மற்றும் நந்தன் ரெட்டி ஆகியோரும், ட்ரீம் லெவன் நிறுவனர் பவித் சேத், ஹர்ஷ் ஜெயின் ஆகியோரும் உள்ளனர்.














