ஆண்ட்ராய்டு கருவிகளை பாதிக்கும் டாம் வைரஸ்

இந்தியாவைச் சேர்ந்த CERT-IN அமைப்பு, கணினிகள் மற்றும் கைபேசிகளுக்கான சைபர் தாக்குதல் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, டாம் (Daam) என்ற ஆண்ட்ராய்டு மால்வேர் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த டாம் வைரஸ், ஆன்டிவைரஸ் தடுப்புகளையும் தாண்டி, தொழில்நுட்ப சாதனத்தின் தரவுகளை திருட வல்லது என கூறப்பட்டுள்ளது. தர்ட் பார்ட்டி வெப்சைட் மூலமாக இந்த வைரஸ் பரப்பப்படுகிறது. ஆண்ட்ராய்டு கைபேசியில் இந்த வைரஸ் தரவிறக்கம் ஆன பிறகு, கைபேசியின் சேமிப்பு பகுதியில் உள்ள அனைத்து தரவுகளும் […]

இந்தியாவைச் சேர்ந்த CERT-IN அமைப்பு, கணினிகள் மற்றும் கைபேசிகளுக்கான சைபர் தாக்குதல் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, டாம் (Daam) என்ற ஆண்ட்ராய்டு மால்வேர் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த டாம் வைரஸ், ஆன்டிவைரஸ் தடுப்புகளையும் தாண்டி, தொழில்நுட்ப சாதனத்தின் தரவுகளை திருட வல்லது என கூறப்பட்டுள்ளது.

தர்ட் பார்ட்டி வெப்சைட் மூலமாக இந்த வைரஸ் பரப்பப்படுகிறது. ஆண்ட்ராய்டு கைபேசியில் இந்த வைரஸ் தரவிறக்கம் ஆன பிறகு, கைபேசியின் சேமிப்பு பகுதியில் உள்ள அனைத்து தரவுகளும் டெலிட் செய்யப் படுகின்றன. அத்துடன், இந்த டாம் வைரஸ், தொலைபேசி அழைப்பு பதிவுகளை ஹேக் செய்ய வல்லதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காண்டாக்ட் லிஸ்டில் இருக்கும் தரவுகளை திருடவும், கைப்பேசியில் உள்ள கேமராக்களை இயக்கும் சக்தி படைத்தது எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், பாஸ்வேர்டுகளை மாற்றி அமைக்க முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, குறுஞ்செய்திகளை பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு ஆபத்து நிறைந்த செயல்களில் ஈடுபட வல்லது என கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பில்லாத செயலிகள் மற்றும் வலைதளங்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் ,தெரியாத ஹைப்பர் லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu