டாபர் நிறுவனத்தின் விற்பனை மதிப்பு 100 கோடியைத் தாண்டியுள்ளது - மோஹித் மல்ஹோத்ரா

September 2, 2022

நேரடியாக வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்படும் டாபர் நிறுவனத்தின் பொருட்கள், இந்த நிதியாண்டில் 100 கோடியைத் தாண்டி உள்ளதாக நிறுவனத்தின் தலைமை அதிகாரி மோஹித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். ‘டாபர் ஷாப்’ என்ற நிறுவனத்தின் சொந்த இணையதளம் மற்றும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணைய வர்த்தகத் தளங்கள் போன்றவற்றின் மூலம், நேரடியாக வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்படும் டாபர் பொருட்களின் விற்பனை மதிப்பு இந்த நிதி ஆண்டில் 100 கோடியைத் தாண்டி உள்ளது. குறிப்பாக, உயர்ரக பொருட்களான குழந்தைகளுக்கான டயப்பர்கள், பவுடர்கள், […]

நேரடியாக வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்படும் டாபர் நிறுவனத்தின் பொருட்கள், இந்த நிதியாண்டில் 100 கோடியைத் தாண்டி உள்ளதாக நிறுவனத்தின் தலைமை அதிகாரி மோஹித் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

‘டாபர் ஷாப்’ என்ற நிறுவனத்தின் சொந்த இணையதளம் மற்றும் அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணைய வர்த்தகத் தளங்கள் போன்றவற்றின் மூலம், நேரடியாக வாடிக்கையாளருக்கு விற்பனை செய்யப்படும் டாபர் பொருட்களின் விற்பனை மதிப்பு இந்த நிதி ஆண்டில் 100 கோடியைத் தாண்டி உள்ளது. குறிப்பாக, உயர்ரக பொருட்களான குழந்தைகளுக்கான டயப்பர்கள், பவுடர்கள், சோப்புகள், வாடிகா பிராண்டை சார்ந்த கூந்தல் பராமரிப்பு பொருட்கள், எண்ணெய் மற்றும் டாபர் நிறுவனத்தின் சூப்பர் ஃபுட்ஸ் ஆகியவை விற்பனையில் சாதனை படைத்துள்ளன. இதுகுறித்து பேசிய நிறுவனத்தின் தலைவர் மோஹித் மல்ஹோத்ரா, “எங்கள் நிறுவனம் 100 கோடி இலக்கை எட்டியதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இணைய வழி விற்பனையில் புதிய பொருட்களை நாங்கள் அறிமுகப்படுத்த உள்ளோம். இதற்காக நாங்கள் 5500 கோடி ரூபாய் தயார் நிலையில் வைத்துள்ளோம். அனைத்து துறைகளிலும் எங்கள் வர்த்தக இலக்கை அடைய நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்” என்று கூறினார். மேலும், “புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பொருட்கள் நான்கு முதல் ஐந்து சதவீதம் மட்டுமே நிறுவனத்தின் விற்பனைக்கு துணை புரியும். ஆனால் அதே புதிய பொருட்கள் இணைய வழியில் விற்பனை செய்யும் பொழுது 10% விற்பனையை எட்டியுள்ளது. இணைய வழி வர்த்தகத்திற்கான செலவுகளும் நான்கில் ஒரு பங்கு அதிகரித்துள்ளது” என்று மல்கோத்ரா தெரிவித்தார். மேலும், பெரும்பாலான துரித உணவு நிறுவனங்கள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யும் முறைக்கு மாறி வருகின்றனர். குறிப்பாக, ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் கடந்த மாதத்தில் 100 கோடி ரூபாய் அளவிலான வணிகம், இணைய வழியில் நடந்துள்ளதாக தெரிவித்தது. மேலும், டாபர் நிறுவனத்தின் மற்ற போட்டி நிறுவனங்களான டாடா, ஐடிசி, பார்லே, அதானி வில்மார் போன்றவையும் இணைய வர்த்தகம் மூலம் வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu