வெளிநாட்டில் இயங்கி வரும் டாபர் நிறுவனத்தின் கிளை நிறுவனங்கள், டாபர் நிறுவனத்தை போன்ற பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில், இந்த நிறுவனங்களின் தயாரிப்புகளால் புற்றுநோய் ஏற்படுவதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
டாபர் நிறுவனத்தின் 3 கிளை நிறுவனங்கள் இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளன. அவை: நமஸ்தே லேபரட்டரீஸ் எல்எல்சி, டெர்மோவிவா ஸ்கின் எசன்ஷியல்ஸ் ஐஎன்சி மற்றும் டாபர் இன்டர்நேஷனல் லிமிடெட் ஆகியவை ஆகும். பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விவரங்களை டாபர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அந்த அறிக்கையின் படி, இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட ஹேர் ரிலாக்ஸர் எனும் தயாரிப்பு, கருப்பை புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல் ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்தந்த நாட்டு நீதிமன்றங்களில் இந்த வழக்குகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.