இந்தியாவில் கோவிட் தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவில் நேற்று 7,830 பேருக்கு கோவிட் தொற்று உறுதியான நிலையில், இன்று தினசரி கோவிட் பாதிப்பு 10,158 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,47,86,160 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கோவிட் பாதித்த 19 பேர் உயிரிழந்ததால் கோவிட் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 5,31,035 ஆனது. தற்போது 44,998 பேர் கோவிட் காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 220,66,24,653 டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.