இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 4,435 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,335 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர்கள் எண்ணிக்கை 25,587 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது.














