இந்தியாவில் தினசரி கொரனோ பாதிப்பு மீண்டும் 10,000-ஐ கடந்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,542 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இது முந்தைய நாள் தொற்றைவிட 38 சதவீதம் அதிகமாகும். இதனால் நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 63,562 ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக திங்கள் கிழமை தொற்று பாதிப்பு 9.111 என்றும் செவ்வாய்க்கிழமை பாதிப்பு 7,633 என்றும் இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று மீண்டும் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் மட்டும் 11 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் இதுவரை கோவிட் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,31,190 ஆக அதிகரித்துள்ளது.