பீகாரில் நிலத்தகராறு காரணமாக 21 குடிசைகளை தீ வைத்து எரித்ததாக 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
பீகாரின் நவாடா மாவட்டத்தில், இரண்டு சமூகங்களுக்கு இடையில் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. மஞ்ஹி தோலா பகுதியில் 21 குடிசைகளை மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர், இதற்காக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியால் இந்த அத்துமீறல்கள் ஏற்படுவதாகக் கண்டித்துள்ளன.














