ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விரைவில் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக எமிஸ் ஐடி மூலம் உள் நுழைவு செய்து விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு நேற்று முன்தினம் மாலை 5 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் தொடக்க கல்வி இயக்கங்கள் நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களிடமிருந்து 82,479 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் தொடர்புடைய அலுவலர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு பின்னர் பதவி வாரியாக முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது