கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கடந்த 16,17 மற்றும் 18ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு அதனை சுற்றி உள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும் மலை நின்ற பிறகும் வெள்ளம் வடிய காலதாமதமானதால் பள்ளிகளுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி வரை விடுமுறை அளித்து அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் 11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ஜனவரி 4ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலும், 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலக தெரிவித்துள்ளார்.