மூத்த குடி மக்களுக்காக இலவச பஸ் பயண டோக்கன்கள் வரும் 21ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது.
போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னையை சார்ந்த மூத்த குடிமக்களுக்காக கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் புதிய பயனாளிகளுக்கு வழங்குதல் ஆகியவை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் டிசம்பர் வரை மூத்த குடிமக்கள் பயன்படுத்தும் வகையில் ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான மேற்கூறிய சேவைகளை இணைப்பில் உள்ள 42 மையங்களில் வருகிற 21ஆம் தேதி முதல் ஜூலை 31ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. அதன் பின்னர் இவை வழக்கம் போல அந்தந்த பணிமனை அலுவலகத்தில் வழங்கப்பட உள்ளன. இதனை பெறுவதற்கு குடும்ப அட்டை, வயது சான்றிதழ் மற்றும் இரண்டு வண்ணப் புகைப்படம் ஆகியவை சமர்ப்பிக்கப்பட வேண்டும்