தீபாவளிக்கு பின்னர் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது

October 25, 2022

தீபாவளிக்கு பின்னர், இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது, காற்றின் தரம் குறித்த குறியீட்டு எண் இந்தியாவின் ஒவ்வொரு நகருக்கும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமையன்று தலைநகர் தில்லியின் காற்று தரம் 323 என்பதாக உள்ளது. அத்துடன், லோதி சாலையில் காற்றின் தரம் 273 என்பதாக குறைந்த அளவில் பதிவாகி இருந்தது. எனவே, காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடும் சஃபர் (SAFAR) அமைப்பு, […]

தீபாவளிக்கு பின்னர், இந்திய தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது, காற்றின் தரம் குறித்த குறியீட்டு எண் இந்தியாவின் ஒவ்வொரு நகருக்கும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய்க்கிழமையன்று தலைநகர் தில்லியின் காற்று தரம் 323 என்பதாக உள்ளது. அத்துடன், லோதி சாலையில் காற்றின் தரம் 273 என்பதாக குறைந்த அளவில் பதிவாகி இருந்தது. எனவே, காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபடும் சஃபர் (SAFAR) அமைப்பு, டெல்லியின் காற்று தரத்தை “மிகவும் மோசமான” பிரிவின் கீழ் வகுத்துள்ளது.

டெல்லியின் பிற பகுதிகளிலும் காற்றின் தரம் குறித்த குறியீட்டு எண் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் பூசா பகுதிகளில், 365 மற்றும் 320 ஆக காற்றின் தரம் பதிவாகி இருந்தது. டெல்லி ஐஐடி பகுதியில் 280 ஆகவும், மதுரா சாலையில் 322 ஆகவும், விமான நிலையம் பகுதியில் 354 ஆகவும் காற்று தரம் குறித்த குறியீட்டு எண் பதிவாகி உள்ளது. தீபாவளிக்கு பின்னர், காற்று மாசுடன் இணைந்து, வெடிப்பொருட்கள் குப்பையும் டெல்லியில் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தீபாவளிக்கு தில்லியில் பட்டாசு வெடிப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. அத்துடன் வாகனங்கள் மூலம் ஏற்படும் காற்று மாசை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அனைத்தையும் மீறி டெல்லியின் காற்று தரம் குறைந்துள்ளது கவலை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, தலைநகர் சென்னையில், தீபாவளி அன்று காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. சராசரியாக, சென்னையில், காற்று தர குறியீடு எண் 192 ஆக இருந்தது.

தமிழகத்தின் பிற பகுதிகளிலும் காற்று மாசுபாடு அளவு தீபாவளியன்று அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. புதுச்சேரியில் காற்று தர குறியீட்டு எண் 250 என்றும், திண்டுக்கல்லில் 145 என்றும், தூத்துக்குடியில் 94 என்றும், வேலூரில் 145 என்றும் பதிவாகியுள்ளது. காற்று மாசுபாடு குறித்த தர குறியீட்டு எண்ணில், 50 முதல் 100 வரை ‘திருப்திகரமானது’ என்றும், 101 முதல் 200 வரை ‘மிதமானது’ என்றும், 201 முதல் 300 வரை மோசமானது என்றும் பிரித்து அறியப்படுகிறது. தற்போது, இந்த வருட தீபாவளியில், எப்போதும் ‘திருப்திகரமான’ நிலையில் இருக்கும் சென்னை, ‘மிதமான’ நிலைக்கும், எப்போதும் ‘மோசமான’ நிலையில் இருக்கும் தில்லி, ‘மிகவும் மோசமான’ நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu