வேதாந்தா உடனான கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய பாக்ஸ்கான் - வேதாந்தா பங்குகள் 3% சரிவு

July 11, 2023

தைவானை சேர்ந்த உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான், இந்தியாவின் வேதாந்தா குழுமத்துடன் நடைபெறுவதாக இருந்த செமி கண்டக்டர் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 20 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட இருந்த நிலையில், நேற்று, பாக்ஸ்கான் நிறுவனம் பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு காரணமாக, பங்குச்சந்தையில் வேதாந்தா குழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், வேதாந்தா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3% வரை சரிவடைந்தது. குறிப்பாக, மும்பை பங்குச் […]

தைவானை சேர்ந்த உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கான், இந்தியாவின் வேதாந்தா குழுமத்துடன் நடைபெறுவதாக இருந்த செமி கண்டக்டர் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 20 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட இருந்த நிலையில், நேற்று, பாக்ஸ்கான் நிறுவனம் பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு காரணமாக, பங்குச்சந்தையில் வேதாந்தா குழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், வேதாந்தா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3% வரை சரிவடைந்தது. குறிப்பாக, மும்பை பங்குச் சந்தையில் 2.6% சரிந்த வேதாந்தா பங்குகள், 274.9 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகின்றன. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையில் 2.56% சரிவடைந்து, 275 ரூபாய்க்கு வேதாந்தா பங்கு விலை பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்தியாவில் தனது செமி கண்டக்டர் தயாரிப்பை விரிவாக்க பாக்ஸ்கான் வேறு முயற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu