நாசாவின் செயல் இழந்த செயற்கைக்கோள் பூமியில் விழுகிறது

கடந்த 2018 ஆம் ஆண்டு, நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று செயல் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. இது, அதற்கு முந்தைய 21 ஆண்டுகளாக பணி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த செயல் இழந்த செயற்கைக்கோள் பூமியில் விழ உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Reuven Ramaty High Energy Solar Spectroscopic Imager (RHESSI) என்ற இந்த செயற்கைக்கோள் பூமியை நோக்கி உட்புறமாக சுற்றுவட்ட பாதையில் வந்து கொண்டிருந்தது. அண்மையில், வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் இருக்கும் போது, சூரிய புயலின் தாக்கம் […]

கடந்த 2018 ஆம் ஆண்டு, நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று செயல் இழந்ததாக அறிவிக்கப்பட்டது. இது, அதற்கு முந்தைய 21 ஆண்டுகளாக பணி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த செயல் இழந்த செயற்கைக்கோள் பூமியில் விழ உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Reuven Ramaty High Energy Solar Spectroscopic Imager (RHESSI) என்ற இந்த செயற்கைக்கோள் பூமியை நோக்கி உட்புறமாக சுற்றுவட்ட பாதையில் வந்து கொண்டிருந்தது. அண்மையில், வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் இருக்கும் போது, சூரிய புயலின் தாக்கம் குறித்து அறிய இது பயன்படுத்தப்பட்டது. தற்போது, 300 கிலோ கிராம் எடையுள்ள இந்த செயற்கைக்கோள் நாளை பூமியில் விழும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்திற்குள் நுழைந்து, சிறிய தூர பயணத்திலேயே இது எரிந்து விடும் என சொல்லப்பட்டுள்ளது. எனினும், சில பாகங்கள் தரைப்பகுதி வரை வந்து விழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனால் பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu