பான் ஆதார் இணைப்புக்கு ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு

March 28, 2023

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கால அவகாசம் நீட்டிக்கப்படுவது இது 5வது முறை என்பது குறிப்பிடத்தக்கது. பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, வரும் மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், 1000 ரூபாய் அபராதத் தொகையுடன் இணைப்பதற்கான அவகாசமாக இது அறிவிக்கப்பட்டிருந்தது. […]

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கால அவகாசம் நீட்டிக்கப்படுவது இது 5வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, வரும் மார்ச் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அதே வேளையில், 1000 ரூபாய் அபராதத் தொகையுடன் இணைப்பதற்கான அவகாசமாக இது அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், இந்தியாவில் உள்ள பலர், பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்காமல் உள்ளனர். பலருக்கு இது குறித்த விழிப்புணர்வே இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கார்டுகளை இணைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu