சீன தலைநகர் பெய்ஜிங் நகரத்துக்கு கிழக்கே உள்ள ஹெபெய் மாகாணத்தில் சான்ஹே என்ற நகரம் உள்ளது. இந்த நகரில் இயங்கி வாய்ந்த உணவகத்தில் இன்று காலை 8 மணி அளவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை இருவர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கிட்டத்தட்ட 26 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. வெடி விபத்தின் விளைவாக நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
வெடி விபத்து தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், வாயு கசிவால் விபத்து நேர்ந்ததாக கருதுகின்றனர். அங்கிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.














