பாகிஸ்தானில் சாலை விபத்துகளில் சிக்கி ஒரே நாளில் 18 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இஸ்லாமாபாத்தின் பகவால்பூர் பகுதிக்கு செல்லும் பயணிகள் பஸ், பதே ஜங் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 22 பேர் படுகாயங்களுடன் பெனாசீர் பூட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் மோசமான காயங்களுடன் இஸ்லாமாபாத்தின் தலைமை மருத்துவமனையில் மாற்றப்பட்டார். போக்குவரத்து காவல் துறையினர் ஓட்டுநரின் அலட்சியத்தையே விபத்துக்கான காரணமாகக் காட்டினர். அதே நேரத்தில், சிந்துவின் நவுஷாஹ்ரோ பெரோஸ் மாவட்டத்தில் எம்-6 மோட்டார்வேயில் ஒரு லாரியும் வேனும் நேருக்குநேர் மோதியதில் எட்டு பேர் இறந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.