பாகிஸ்தான் முன்னாள் ஆட்சியாளர் முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
தேச துரோக குற்றச்சாட்டுக்காக பாகிஸ்தான் முன்னாள் ஆட்சியாளர் முஷாரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் இந்த தீர்ப்பு விதிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2022-ல், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்துக்கு புறம்பானது என லாகூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், இந்த வழக்கு, 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வுக்கு வந்தது. இதில், முஷாரப்புக்கு அறிவிக்கப்பட்ட மரண தண்டனை உறுதி செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு, பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அறிவித்தது தொடர்பாக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில், துபாயில் வசித்து வந்த முஷாரப் உடல் நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.