சிலி காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 22ஆக உயர்வு

February 6, 2023

தென்-மத்திய சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதுவரை காட்டுத் தீக்கு சுமார் 14,000 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது. இந்த நிலையில் காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. இதனை அந்நாட்டின் உள்துறை மந்திரி உறுதி செய்துள்ளார். மேலும் 1,429 பேர் […]

தென்-மத்திய சிலியில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதன் காரணமாக வெப்பக்காற்றுகள் வீசி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. இதுவரை காட்டுத் தீக்கு சுமார் 14,000 ஹெக்டேர் நிலம் எரிந்து நாசமானது. இந்த நிலையில் காட்டுத் தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. இதனை அந்நாட்டின் உள்துறை மந்திரி உறுதி செய்துள்ளார்.

மேலும் 1,429 பேர் தங்குமிடங்களில் உள்ளனர். 554 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 16 பேர் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu