நைஜீரியாவில் டேங்கர் லாரி வெடித்து விபத்து ஏற்பட்டதில் இறந்தோரின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் ஜிகாவா மாகாணத்தில் 15ம் தேதி இரவு, பெட்ரோல் ஏற்றிய டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், லாரியில் இருந்த பெட்ரோல் கசிந்து வெளியேறியது. இதையடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் அதனை சேகரிக்க வந்தனர். அப்போது, எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு வெடி விபத்து ஏற்பட்டது. ஆரம்பத்தில் 94 பேர் உயிரிழந்ததாக தகவல் வந்தாலும், தற்போது இறந்தோரின் எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.