லிபியாவில் மழையால் 5,200 பேர் பலி - 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை

September 13, 2023

புயல் மற்றும் மழை காரணமாக லிபியாவில் 5,200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.10,000 மேற்பட்டோரை காணவில்லை. மத்திய தரை கடலின் அயோனியன் கடல் பகுதியில் சமீபத்தில் புயல் உருவானது. இந்த புயலுக்கு டேனியல் என்று பெயரிட்டனர். இந்தப் புயல் கடந்த பத்தாம் தேதி லிபியாவில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக கடந்த சில நாட்களாகவே லிபியாவில் வரலாறு காணாத மழை பெய்கின்றது. இதனால் கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால் அந்த நதியில் […]

புயல் மற்றும் மழை காரணமாக லிபியாவில் 5,200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.10,000 மேற்பட்டோரை காணவில்லை.

மத்திய தரை கடலின் அயோனியன் கடல் பகுதியில் சமீபத்தில் புயல் உருவானது. இந்த புயலுக்கு டேனியல் என்று பெயரிட்டனர். இந்தப் புயல் கடந்த பத்தாம் தேதி லிபியாவில் கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக கடந்த சில நாட்களாகவே லிபியாவில் வரலாறு காணாத மழை பெய்கின்றது. இதனால் கிழக்கு லிபியா பகுதியில் டெர்னா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதனால் அந்த நதியில் உள்ள இரண்டு அணைகள் உடைந்தது. இதன் விளைவாக டெர்னா, சூசா உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதில் 5,200க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.10,000 மேற்பட்டோரை காணவில்லை.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பிரதமர் ஒசாமா நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகிறார் பல்வேறு நாடுகளிடமிருந்து நிவாரண உதவிகள் வந்துள்ளன. ஐநா சபை, செஞ்சிலுவை சங்கம் சார்பில் உதவிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu