தமிழக அரசின் மொத்த கடன் ரூ.21,980 கோடியாக அதிகரிப்பு
தமிழக முதன்மை கணக்காய்வு துறைத் தலைவர் ஜெய்சங்கர், சென்னையில் செய்தியாளர்களுக்கு CAG அறிக்கையை வெளியிட்டார். அதில், தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் மொத்த கடன் ரூ.21,980 கோடியாக உயர்ந்துள்ளது. 2017-க்கு முன்பாக இருந்த கடனைவிட இது 3 மடங்கு அதிகரித்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்களின் செலவினம் 55.20% முதல் 63.55% வரை உள்ளது. மேலும், 2022-23 நிதியாண்டில் தமிழ்நாட்டின் தனிநபர் GDP ₹3,08,020 ஆக இருப்பதாகவும், இந்திய தனிநபர் GDP ₹1,96,983 ஆக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை 46,538 கோடியில் இருந்து 36,215 கோடியாக குறைந்துள்ளது. தமிழகத்தின் GSDP வளர்ச்சி 14.16% ஆகவும், வரி வருவாய் ₹1.88 லட்சம் கோடியும் உள்ளதாக CAG அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.