விளையாட்டு உபகரணங்கள் மற்றும் விளையாட்டு துறை சார்ந்த பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் டெக்கத்லான் நிறுவனம், இந்திய விற்பனையில் நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. கடந்த 2023 ஆம் நிதி ஆண்டில், டெக்கத்லான் நிறுவனத்தின் இந்திய விற்பனை 37% உயர்ந்து 395 கோடி அளவில் பதிவாகியுள்ளது.பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டெக்கத்லான் நிறுவனம், அடிடாஸ், நைக் போன்ற இதர விளையாட்டு துறை சார்ந்த நிறுவனங்களை விட இந்தியாவில் மிகவும் பெரிதாக விரிவாக்கம் அடைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட விற்பனையகங்களை திறந்து உள்ளது. கிட்டத்தட்ட 85 விளையாட்டு பிரிவுகளில் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. விற்பனையில் 37% உயர்வை பதிவு செய்திருந்தாலும், டெக்கத்லான் நிறுவனத்தின் நிகர இழப்பு 18.6 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நிறுவனத்திற்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுவதால், நிகழாண்டில் லாபம் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.














