ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் கூடுதலாக 500 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறையில் கீழ் செயல்பட்டு வரும் ஊராட்சி, ஒன்றிய நகராட்சி, மாநகராட்சி, அரசு, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டிய இடைநிலை ஆசிரியர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டது. அதன்படி 2023-2024 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள 8,643 எண்ணிக்கையான இடங்களுக்கு 1000 இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக 500 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கல்வி இயக்குனருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும். மேலும் அவர்கள் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அந்த மாவட்டங்களில் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் தேர்வு செய்ய வேண்டும் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.