அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு இடையே விமான போக்குவரத்தை அதிகரிக்க முடிவு

August 12, 2023

அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையே தற்போதைய பயணிகள் விமானங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க உள்ளது என செய்திகள் வந்துள்ளது. அமெரிக்க போக்குவரத்துத் துறை அமெரிக்காவிற்குப் பறக்க அனுமதிக்கப்படும் சீனப் பயணிகள் விமானங்களின் எண்ணிக்கை தற்போது 12 -ஆக உள்ளது. இது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 18 வாராந்திர சுற்றுப் பயணங்களாக உயரவுள்ளது. பின்னர் அக்டோபர் 29 முதல் வாரத்திற்கு 24 ஆக இது அதிகரிக்கப்படும். அதே போல் அமெரிக்க பயணிகள் விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்த […]

அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்கு இடையே தற்போதைய பயணிகள் விமானங்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக அதிகரிக்க உள்ளது என செய்திகள் வந்துள்ளது.

அமெரிக்க போக்குவரத்துத் துறை அமெரிக்காவிற்குப் பறக்க அனுமதிக்கப்படும் சீனப் பயணிகள் விமானங்களின் எண்ணிக்கை தற்போது 12 -ஆக உள்ளது. இது செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 18 வாராந்திர சுற்றுப் பயணங்களாக உயரவுள்ளது. பின்னர் அக்டோபர் 29 முதல் வாரத்திற்கு 24 ஆக இது அதிகரிக்கப்படும். அதே போல் அமெரிக்க பயணிகள் விமானங்களின் எண்ணிக்கையை உயர்த்த சீன அரசாங்கம் ஒப்புக் கொள்ளும் என்று தகவல்கள் தெரிவித்தன.

கடந்த வியாழக்கிழமை தொற்றுநோய் காலக் கட்டுப்பாடுகளை சீனா நீக்கிய பின்னர், பெய்ஜிங்கிற்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் அடையாளமாக இந்த ஒப்பந்தம் உள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு முன்பு, இரு நாடுகளுக்கிடையே 150 க்கும் மேற்பட்ட சுற்று-பயணங்கள் அனுமதிக்கப்பட்டது. எனவே, 24 வாராந்திர விமானங்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது மிகவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu