கருடா கமாண்டோ படையில் பெண் அதிகாரிகளை சேர்க்க இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து விமானப் படைமூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்திய விமானப் படையில் கருடா கமாண்டோ படைப் பிரிவு 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கருடா கமாண்டோ படையில் விரைவில் பெண் அதிகாரிகள் சேர்க்கப்படுவர். அவர்கள் மரைன் கமாண்டோக்கள் (மார்க்கோஸ்) என்று அழைக்கப்படுவர்.
ஏற்கெனவே இந்திய கடற் படையிலும் பெண் அதிகாரிகளை சிறப்புப் பிரிவில் சேர்த்து வரும் நிலையில் தற்போது விமானப் படையிலும் பெண்களைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஆள் தேர்வில் எந்தவித பாகுபாடும் இருக்காது. கமாண்டோ படையில் பெண் அதிகாரிகளைச் சேர்ப்பதற்கு முன்பு அவர்களிடம் அதற்கு ஒப்புதல் பெறப்படும். தாமாகவே முன்வந்தால் மட்டுமே அவர்கள் கமாண்டோ படையில் சேர்க்கப்படுவர் என்று அவர் கூறினார்.