தமிழகத்திற்கு வரும் சர்வதேச விமான பயணிகளை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சீனா உள்ளிட்ட நாடுகளில் பிஎப்.7 என்ற உருமாறிய கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இததொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதன்பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் உருமாறிய கொரோனா பரவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.