20 கிலோ பாக்கெட்டில் ரேஷன் அரிசி தர முடிவு

November 29, 2022

நியாய விலை கடைகளில் 20 கிலோ பாக்கெட்டில் அரிசியை வழங்க உணவுத் துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்திலுள்ள நியாய விலை கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான எடையில் அரிசியை வழங்குவதில்லை என பல ஆண்டுகளாகவே தொடர்ந்து புகார்கள் கூறப்படுகின்றன. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 10, 20 கிலோ என எடை போட்டு சீலிடப்பட்ட பாக்கெட்டில் அரிசியை வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், […]

நியாய விலை கடைகளில் 20 கிலோ பாக்கெட்டில் அரிசியை வழங்க உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்திலுள்ள நியாய விலை கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான எடையில் அரிசியை வழங்குவதில்லை என பல ஆண்டுகளாகவே தொடர்ந்து புகார்கள் கூறப்படுகின்றன. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், 10, 20 கிலோ என எடை போட்டு சீலிடப்பட்ட பாக்கெட்டில் அரிசியை வழங்க உணவு துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெளிச்சந்தையில் 25 கிலோ, 10 கிலோ, 5 கிலோ என பாக்கெட்டில் விற்கப்படும் அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது. இது, நியாய விலை கடைகளில் பாக்கெட்டில் வழங்கும் அரிசிக்கும் பொருந்தும்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு உரிய அரிசியை, அதற்கு ஏற்ற எடை உடைய பாக்கெட்டில் மூட்டைகளாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளில் பாக்கெட்டில் வழங்கவுள்ள அரிசிக்கு ஜி.எஸ்.டி., வரியில் இருந்து விலக்கு அளிக்குமாறு, ஜி.எஸ்.டி., கவுன்சிலிடம் அனுமதி கோரப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu