புதுச்சேரியில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்காத 60 ஆயிரம் பேரை நீக்க முடிவு 

November 7, 2022

புதுச்சேரியில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத 60 ஆயிரம் பேரை நீக்க குடிமை பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் 3.50 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், இரண்டு மாநிலங்களில் ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதியற்ற பயனாளிகளை மத்திய அரசு கண்டறிந்து புதுச்சேரி அரசுக்கு அனுப்பியுள்ளது. இதில் புதுச்சேரியில் இருந்து 13,400 பேர் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தங்களது பெயர்களை ரேஷன் கார்டுகளில் இடம் பெற செய்துள்ளது தெரிய வந்தது. […]

புதுச்சேரியில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காத 60 ஆயிரம் பேரை நீக்க குடிமை பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 3.50 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், இரண்டு மாநிலங்களில் ரேஷன் கார்டு வைத்துள்ள தகுதியற்ற பயனாளிகளை மத்திய அரசு கண்டறிந்து புதுச்சேரி அரசுக்கு அனுப்பியுள்ளது. இதில் புதுச்சேரியில் இருந்து 13,400 பேர் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தங்களது பெயர்களை ரேஷன் கார்டுகளில் இடம் பெற செய்துள்ளது தெரிய வந்தது. சரியான ஆவணங்ளை சமர்பிக்காத இவர்களது பெயர்களை நீக்குவது தொடர்பாக குடிமை பொருள் வழங்கல் துறை ஆய்வு செய்து வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் ஆதார் எடுக்கப்பட்டது 100 சதவீதமாக பதிவாகி உள்ளது. ஆனால் ரேஷன் கார்டுடன் 60 ஆயிரம் பேர் இன்னும் தங்களது ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர். இவர்கள் புதுச்சேரியில் வசிக்காமல் பிற மாநிலம் அல்லது வெளிநாடுகளில் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களை பற்றிய முகவரியை எடுத்துள்ள குடிமை பொருள் வழங்கல் துறை வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்து வருகிறது.

இவர்கள் தானாக முன் வந்து ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் அந்தந்த ரேஷன் கார்டுகளில் இருந்து அவர்களது பெயர் நீக்க குடிமை பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் அட்டையை இணைப்பதன் மூலம், தனி நபர் பல ரேஷன் கார்டுகள் வைத்திருப்பதைத் தவிர்க்க முடியும். தகுதியான நபர்கள் மட்டுமே மானிய விலையில் அரிசி ஆகியவற்றைப் பெறுவதையும் உறுதி செய்ய முடியும் என்பதால் கள ஆய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu