மக்கள் தொகை குறைவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சீன அரசு குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்த புதிய நிதி உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது.
சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவடைந்து, மக்கள் தொகை குறைந்து வரும் நிலையில், அரசு பல்வேறு ஊக்கத்திட்டங்களை அறிவித்தும் பெரிதும் பலனளிக்கவில்லை. இதனால், இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆண்டுதோறும் 3,600 யுவான் (சுமார் ரூ.44 ஆயிரம்) மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி குழந்தையின் 3 வயது வரை வழங்கப்படுவதால், ஒரு குழந்தைக்கு மொத்தமாக ரூ.1.30 லட்சம் வழங்கப்படும். 2022 முதல் 2024க்குள் பிறந்த குழந்தைகளுக்கான குடும்பங்களும் பகுதி உதவிக்காக விண்ணப்பிக்கலாம். வருடத்திற்கு 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த திட்டம் பயன் அளிக்கும் என்றும், குழந்தைகளை வளர்ப்பதில் வரும் நிதிச் சுமையைக் குறைக்கும் என்றும் சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.