படிப்பைத் தொடரும் பெண் பிள்ளைகளின் எண்ணிக்கை சரிந்துள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
முன் துவக்க நிலை வகுப்புகளிருந்து மேல்நிலை வகுப்புகள் வரை தொடர்சியாக பயிலக்கூடிய மாணவிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் சரிந்து வருவதை மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. அந்த வகையில் 2019-2020ம் ஆண்டில், முன் துவக்க வகுப்புகள் முதல் மேல்நிலை வகுப்புவரை பயின்ற மாணவிகள் எண்ணிக்கை 65 லட்சத்து 16 ஆயிரத்து 838ஆக இருந்தது. ஆனால் 2020 - 2021 கல்வி ஆண்டில் அந்த எண்ணிக்கையானது 63 லட்சத்து 23ஆயிரத்து 336 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் தமிழகத்தில் குறைந்ததன் காரணமாகவும், மாணவிகளின் இடைநிற்றல் அதிகரிப்பு, குழந்தை திருமணம் ஆகியவற்றால் இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.