அட்லாண்டிக் கடலின் அடியில் 4,160 அடி (1,268 மீட்டர்) ஆழத்திற்கு சென்று, பூமியின் மேலோடு பகுதியிலிருந்து விஞ்ஞானிகள் மாதிரிகளை சேகரித்துள்ளனர். இதுவரை எடுக்கப்பட்ட மிக ஆழமான மாதிரி இதுவாகும். அட்லாண்டிஸ் மாசிஃப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த மாதிரி, மேலோடு பகுதியின் கலவை மற்றும் வேதி செயல்முறைகள் பற்றிய புதிய தகவல்களை வழங்குகிறது. மேலும், பூமியில் உயிரின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளை ஆதரிக்கிறது.
கடந்த 2023 ஏப்ரல் முதல் ஜூன் வரை நடந்த தோண்டும் பணியில் கிடைத்த இந்த மாதிரி, 2,907 அடி (886 மீட்டர்) நீளமுள்ளது மற்றும் தோண்டப்பட்ட பாறையில் 70% க்கும் அதிகமாக உள்ளது. ஆழம் மற்றும் பாறை மீட்பு ஆகியவற்றில் முந்தைய முயற்சிகளை விட இது சிறந்து விளங்குகிறது.