இந்தியாவின் ராணுவ தளவாட உற்பத்தி கடந்த 2024-ம் நிதியாண்டில் 16.8% உயர்ந்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய வரலாற்றில் அதிகபட்ச பாதுகாப்பு துறை வளர்ச்சியாக இது உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் நிதி ஆண்டில், பாதுகாப்பு துறை உற்பத்தி 126887 கோடி ரூபாய் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராணுவ தளவாட ஏற்றுமதி வரலாற்று உச்சமாக 21083 கோடி ரூபாய் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 32.5% உயர்வாகும். குறிப்பாக, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் அதிக வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இன்று ராஜ்நாத் சிங் வெளியிட்ட இந்த அறிக்கை பங்குச்சந்தையில் எதிரொலித்தது. ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் உள்ளிட்ட பாதுகாப்புத் துறை சார்ந்த பங்குகள் உயர்ந்து வர்த்தகம் ஆகின.