ரூ.5,500 கோடி மதிப்பில் பாதுகாப்புத் துறை ஒப்பந்தம்

March 31, 2023

ராணுவத் தளவாட தயாரிப்புத் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை ரூ.5,498 கோடி மதிப்பில் 10 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. ஹெலிகாப்டர்களில் பயன்படுத்துவதற்கான 90 மின்னணு போர் சாதனங்கள் தயாரிப்பு, ஆகாஷ் ஏவுகணை அமைப்பின் பராமரிப்பு உட்பட 10 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 10 ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.5,498 கோடி என்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து பாரத் எலக்ட்ரானிக்ஸ் கூறுகையில், “இந்தியாவை சுயசார்பாக மாற்றும் மத்திய அரசின் முயற்சிக்கும், மேக் இன் இந்தியா திட்டத்துக்கும் […]

ராணுவத் தளவாட தயாரிப்புத் தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை ரூ.5,498 கோடி மதிப்பில் 10 ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது.

ஹெலிகாப்டர்களில் பயன்படுத்துவதற்கான 90 மின்னணு போர் சாதனங்கள் தயாரிப்பு, ஆகாஷ் ஏவுகணை அமைப்பின் பராமரிப்பு உட்பட 10 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 10 ஒப்பந்தங்களின் மதிப்பு ரூ.5,498 கோடி என்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து பாரத் எலக்ட்ரானிக்ஸ் கூறுகையில், “இந்தியாவை சுயசார்பாக மாற்றும் மத்திய அரசின் முயற்சிக்கும், மேக் இன் இந்தியா திட்டத்துக்கும் இந்த ஒப்பந்தம் ஒரு மைல்கல்லாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu