விவசாயிகள் பேரணி - தில்லியில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு

February 12, 2024

இந்தியாவில் உள்ள பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியில் ஈடுபட உள்ளனர். நாளை முதல் டெல்லி நோக்கி பேரணி நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த பேரணியில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டெல்லியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், தில்லியில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறை ஆணையர் […]

இந்தியாவில் உள்ள பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியில் ஈடுபட உள்ளனர். நாளை முதல் டெல்லி நோக்கி பேரணி நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்த பேரணியில் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, டெல்லியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், தில்லியில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தில்லி காவல்துறை ஆணையர் சஞ்சய் ஆரோரா இதனை தெரிவித்துள்ளார்.

வேறு மாநிலங்களில் இருந்து தில்லிக்குள் நுழையும் எல்லை பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு நிகழ்ந்ததைப் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu