டெ ல்லி எய்ம்ஸ் சர்வர் முடக்கபட்டது குறித்து சிபிஐ.,க்கு டெல்லி காவல்துறை கடிதம்
எழுதியுள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 5 சர்வர்கள் முடக்கப்பட்டன. இதனால், அங்கு பணிகள் பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர முயற்சிக்கு பின்னர் அவை பாதுகாப்பாக மீட்கப்பட்டன. இது குறித்த விசாரணையில் சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் தான் இதற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் சிபிஐ.,க்கு டெல்லி காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், எய்ம்ஸ் மருத்துவமனையின் இணைய சர்வர்கள் சீனா மற்றும் ஹாங்காங்கை மையமாக வைத்து சைபர் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த நாடுகளில் இருந்து வந்துள்ள மின்னஞ்சலின் இணைய சர்வர்கள் குறித்த தகவல்களை சர்வதேச காவல்துறையிடம் இருந்து பெற்று தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.














