10 ஆண்டுகள் கடந்த டீசல் மற்றும் 15 ஆண்டுகள் கடந்த பெட்ரோல் வாகனங்களுக்கு இன்று முதல் எரிபொருள் விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், பழைய வாகனங்களுக்கான கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகள் கடந்த டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் கடந்த பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்யக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. பெட்ரோல் பங்குகள் வாகனங்களின் RC ஐ சரிபார்த்த பின்னரே பெட்ரோல்/டீசல் விற்பனை செய்ய வேண்டும். இந்தத் தடை உத்தரவை மீறினால், 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.5000 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 15 ஆண்டுகள் கடந்த CNG வாகனங்கள் இந்த தடை வரம்பில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.