பழைய டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களுக்கு எதிரான தடையை ஜூலை 1ல் அமல்படுத்திய டெல்லி அரசு, எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்தியது. இந்தத் தடை மீண்டும் நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்களும், 15 ஆண்டுகள் பழமையான பெட்ரோல் வாகனங்களும் டெல்லியில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறி, அவற்றுக்கு எரிபொருள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதை மீறிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்யத் தொடங்கினர். அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழ, தற்காலிகமாக தடை திரும்ப பெறப்பட்டது. தற்போது, காற்று தர மேலாண்மை ஆணையம் வலியுறுத்தியபடி, நவம்பர் 1 முதல் மீண்டும் இந்தத் தடை அமல்படுத்தப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.