பெண்கள் பிரிமியர் லீக் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஆர்சிபி அணியுடன் மோதியது.
பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஆர்.சி.பி அணிகள் விளையாடியது. இதில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. அதனை அடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. பின்னர் ஆட்டத்தின் இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.