டெல்லி விமான நிலையத்தில் இருந்து நொய்டா விமான நிலையத்துக்கு 80 நிமிடத்தில் பயணம் - ரேபிட் ரயில் திட்டம் அறிவிப்பு

January 23, 2024

டெல்லி விமான நிலையத்திலிருந்து நொய்டா விமான நிலையத்துக்கு வெறும் 80 நிமிடங்களில் செல்ல முடியும். இதற்காக, ரேபிட் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் மற்றும் நொய்டா விமான நிலையத்தை நேரடியாக இணைக்கும் வகையில் ரேபிட் ரயில் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக உத்திர பிரதேச மாநில அரசு 16000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, இனிமேல் வெறும் 80 நிமிடங்களில் பொதுமக்கள் விமான நிலையத்துக்கு செல்ல முடியும். விமான நிலையங்களை […]

டெல்லி விமான நிலையத்திலிருந்து நொய்டா விமான நிலையத்துக்கு வெறும் 80 நிமிடங்களில் செல்ல முடியும். இதற்காக, ரேபிட் ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி இந்திரா காந்தி விமான நிலையம் மற்றும் நொய்டா விமான நிலையத்தை நேரடியாக இணைக்கும் வகையில் ரேபிட் ரயில் திட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்காக உத்திர பிரதேச மாநில அரசு 16000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, இனிமேல் வெறும் 80 நிமிடங்களில் பொதுமக்கள் விமான நிலையத்துக்கு செல்ல முடியும். விமான நிலையங்களை இணைப்பது மட்டுமின்றி, டெல்லியின் பல்வேறு முக்கிய இடங்களை இந்த ரயில் வழித்தடம் இணைப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ள திட்டமாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இதற்கிடையே, நொய்டா விமான நிலையம் இந்த வருடத்திற்குள் தனது விமான செயல்பாடுகளை தொடங்க உள்ளது குறிப்பிடதக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu