டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 40 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளது.
டெல்லி அரசின் மதுபானக் கொள்கையை அமல்படுத்தியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டில்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது புதிய மதுபான கொள்கை ரத்து செய்யப்பட்டு டில்லியில் மீண்டும் பழைய மதுபான கொள்கை அமலுக்கு வந்துள்ளது.
இந்த விவகாரம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று மீண்டும் டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. மதுபான தொழிலதிபர்கள், விநியோகஸ்தர்கள் இத்தொழிலில் உள்ள சப்ளை செயின் தொடரில் இருப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் இச்சோதனை நடைபெறுகிறது.














