டெல்லியில் கடந்த சில நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. மேலும், டெல்லியின் வெப்பநிலை 1.8 டிகிரி செல்சியஸ் வரை மிகவும் குறைவாக பதிவாகியுள்ளது. குறிப்பாக, தென்மேற்கு டெல்லியில் உள்ள அயாநகர் பகுதியில் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், லோதி ரோடு, ரிட்சி பகுதிகளில் முறையே 3.8 டிகிரி செல்சியஸ் மற்றும் 3.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. இது, கடந்த 2 வருட ஜனவரி மாத வெப்பநிலையை விட மிகக் குறைந்த அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியின் வெப்பநிலை பல்வேறு மலைவாசத் தலங்களைவிட குறைவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், டெல்லி மட்டுமின்றி, வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், பனி மூட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து மிகவும் பாதிப்படைந்துள்ளது. கிட்டத்தட்ட 26 ரயில்கள் தாமதமாகியுள்ளன. இந்நிலையில், வரும் ஜனவரி 7ஆம் தேதி முதல், வட இந்தியாவை கடும் குளிர் வாட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.