மாதாந்திர மின்சார வாகன விற்பனையில் வரலாறு படைத்த டெல்லி

January 5, 2023

கடந்த டிசம்பர் மாதத்தில், வரலாற்றில் முதல் முறையாக, அதிக எண்ணிக்கையிலான மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு டெல்லியில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டுமே, டெல்லியில் 7046 மின்சார வாகனங்கள் பதிவாகியுள்ளன. இது வருடாந்திர அடிப்படையில் 86% அதிகமாகும். கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில், மின்சார வாகன கொள்கைகள் தொடங்கப்பட்டதிலிருந்து, டெல்லியில் இதுவரை 93239 மின்சார வாகனங்கள் பதிவாகியுள்ளன. அதில் 55% இருசக்கர வாகனங்கள் ஆகும். இதுகுறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், […]

கடந்த டிசம்பர் மாதத்தில், வரலாற்றில் முதல் முறையாக, அதிக எண்ணிக்கையிலான மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு டெல்லியில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டுமே, டெல்லியில் 7046 மின்சார வாகனங்கள் பதிவாகியுள்ளன. இது வருடாந்திர அடிப்படையில் 86% அதிகமாகும். கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில், மின்சார வாகன கொள்கைகள் தொடங்கப்பட்டதிலிருந்து, டெல்லியில் இதுவரை 93239 மின்சார வாகனங்கள் பதிவாகியுள்ளன. அதில் 55% இருசக்கர வாகனங்கள் ஆகும்.

இதுகுறித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், “தலைநகர் டெல்லி எப்போதுமே மின்சார வாகன தலைநகரமாகவும் விளங்குகிறது. இங்கு, தற்போதைய நிலையில் 2300 க்கும் மேற்பட்ட பேட்டரி சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன” என்று கூறினார். மேலும், டெல்லி அரசு, 1500 கோடிக்கும் மேற்பட்ட நிதியை மின்மயமாக்கல் திட்டங்களில் செலவிட்டு வருவதாக கூறினார். அத்துடன், டெல்லி மின்சார வாகன கொள்கையை பெரிய வெற்றியாக மாற்றிய டெல்லி நகர மக்களுக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu