அகமதாபாத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில் 270 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் Dreamliner விமான பாதுகாப்பை சந்தேகத்துக்குள்ளாக்கியுள்ளது.
அகமதாபாத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா ஏஐ 171 போயிங் 787 Dreamliner விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர். இங்கிலாந்தைச் சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி ஒருவரே உயிருடன் மீட்கப்பட்டார். Dreamliner ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செல்லத் தொடங்கிய நிலையில், விமானங்களின் மேம்பாட்டு பணிகள் காரணமாக விமான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, டெல்லி–வாஷிங்டன் இடையிலான விமான சேவை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.